கனடா, பிரெஞ்சு மக்கள், பிரித்தானிய மக்கள் மற்றும் பூர்வக்குடியினர் என்னும் மூன்று பிரிவு மக்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டதாக தெரிவித்த கார்னி, கனடா அடிப்படையிலேயே அமெரிக்காவிலிருந்து வித்தியாசமானது என்றும், எப்போதும், எந்த வகையிலும். கனடா அமெரிக்காவின் ஒரு பாகமாக ஆகாது என்றும் உறுதிபடத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலத்தில் இந்தியா – கனடா இடையே உறவுகள் சுமூகமாக இல்லை. கனடாவில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கனடாவில் ஃபெடரல் தேர்தல்கள் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளன, ஆனால் கார்னி முன்கூட்டியே தேர்தல்களை அறிவிப்பார் என நம்பப்படுகிறது.
அண்மையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்து நின்றதால், தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவது லிபரல் கட்சிக்கு சாதகமாக இருக்கலாம் என ஆய்வாளர்களின் கணிக்கின்றனர்.
தான் பிரதமரானால் இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு மீண்டும் ஏற்படுத்தப்படும் என மார்க் கார்னி அண்மையில் தெரிவித்திருந்தார். ஒத்த கருத்துடைய நாடுகளுடன் கனடாவின் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் அவர் பேசினார்.
“ஒத்த கருத்துடைய நட்பான நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்த கனடாவுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுடன் நமது உறவை மீண்டும் கட்டமைக்க நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இந்த வர்த்தக தொடர்புகளைச் சுற்றி இருதரப்புக்கும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். நான் பிரதமராக இருந்தால், அந்த வாய்ப்பை நான் எதிர்நோக்கியிருப்பேன்.” என்றார் கார்னி.
ஜனவரியில் ஜஸ்டின் ட்ரூடோ தனது ராஜினாமாவை அறிவித்த போது, இந்திய வெளியுறவுத்துறை, கனடாவுடன் இருதரப்பு உறவை வலுவடையச் செய்வதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தது.
கனடாவில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் மீது ஒரு கண் வைத்திருப்பதாக இந்தியாவின் வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் அந்த நேரத்தில் தெரிவித்திருந்தார்.
அதே நேரம், இந்தியா-கனடா இடையே வலுவான உறவு இருப்பதாகவும். இந்த உறவுகள் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும், இந்த திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்க இந்தியா தயாராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.