Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

நவம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஐந்து வருடங்கள் பொறுத்தது போதும் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை பட்டதாரிகள் சங்கதின் தலைவர் கணேசன் அனீரன் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியானது திருமலை வீதி சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவை சென்றடைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடந்த ஐந்து வருடங்களாக கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமார் 200 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

ஐந்து வருட அநீதிக்கு நியாயம் வேண்டு, போட்டிப் பரீட்சை மட்டும்தான் தகுதியா?, அரசே பாடசாலையில் ஆசிரியர் பணி புரிந்து பல மாற்றங்களைக் கொண்டு வந்த எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்கு, மாணவர்களின் உள்ளங்களைப் புரிந்து கொண்ட எங்களை ஏமாற்றாதே!, ஜனநாயகம் மலர நீதி வழங்கு, அன்புள்ள அனுர அவர்களே கருணை மிகு ஹரினி அவர்களே ஆசிரியராகும் எங்கள் பணியை உறுதிப்படுத்தி தாருங்கள் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு, கோசமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை முழுவதும் 16600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதுடன், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் 1400 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பிரதமர் மார்க் கார்னியை சீனாவுக்கு அழைத்த சீன ஜனாதிபதி
அடுத்த செய்தி யாழில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது !

அக்டோபர் 27, 2025
இலங்கை

வலி வடக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வு

ஜனவரி 1, 2026
இலங்கை

கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

ஆகஸ்ட் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?