நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து , அதனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அதன் போது படகினுள் இருந்து , 185 கிலோ 600 கிராம் கஞ்சா போதை பொருளை மீட்டுள்ளனர். அதனை அடுத்து படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 41 மில்லியன் ரூபாய் பெறுமதியானது எனவும் மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு என்பவற்றுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நெடுந்தீவு பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
நெடுந்தீவு பொலிஸார் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , விசாரணைகளின் பின்னர் இருவரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
