Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஈராக் மின் நிலையத்தில் தீவிபத்து: நால்வர் பலி

நவம்பர் 21, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தெற்கு ஈராக்கில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஸ்ராவிற்கு வடக்கே அமைந்துள்ள ஹார்தா (Hartha) மின் உற்பத்தி நிலையத்தில் அதிகாலை 6 மணியளவில் (0300 GMT) இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டதைத் தொடர்ந்து சிவில் பாதுகாப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக ஈராக்கின் அரச செய்தி நிறுவனமான INA தெரிவித்துள்ளது.

இந்தத் தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியதால் மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்தவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்துள்ளதாகவும் ஈராக்கின் பாதுகாப்பு ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களுக்குத் தீக்காயங்களும் புகை சுவாசித்தலால் ஏற்பட்ட பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிவாயு விநியோகிக்கும் குழாயில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஈராக்கின் மின்சார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து வெளியான புகைப்படங்களில் எரிவாயுக் குழாயின் பகுதிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதையும், சுற்றியுள்ள நிலம் கருகிக் காணப்படுவதையும், இடிபாடுகள் சிதறிக் கிடப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

இந்த வெடிப்புச் சம்பவத்திற்கான காரணங்களைக் கண்டறியவும் பொறுப்பாளர்களை அடையாளம் காணவும் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலி அல்-சைதி (Ali al-Zaidi) உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

800 மெகாவோட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஹார்தா மின்நிலையம், தீவிபத்திற்கு முன்னர் சுமார் 400 மெகாவோட் திறனில் இயங்கி வந்ததாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் மற்றும் முழுமையான சேத விவரங்கள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

பல தசாப்த காலக் குறைந்த முதலீடு, போதிய பராமரிப்பின்மை மற்றும் குறிப்பாகக் கடுமையான கோடை காலங்களில் உச்சக்கட்டத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமை ஆகிய பிரச்சினைகளை ஈராக்கின் மின்சாரக் கட்டமைப்பு நீண்டகாலமாக எதிர்கொண்டு வருகிறது.

துணை மின்நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் தீவிபத்துகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக முன்னரும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுப் பரவலான மின்தடைகள் ஏற்பட்டுள்ளன.

முந்தைய செய்தி வாழ்க்கைச் செலவு உயர்வால் லிஸ்பனில் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்தி ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் திருவுருவப் படம் திறப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

தேசத்துரோக குற்றச்சாட்டு: ஜெர்மனியின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் கைது

அக்டோபர் 7, 2026
உலகம்

ஏற்றுமதி பாதைக்கு அனுமதிக்கோரிய ஜெலென்ஸ்கி!

அக்டோபர் 17, 2026
உலகம்

ராஜஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!

அக்டோபர் 15, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஈரான் தாக்கப்படாமல் இருந்திருந்தால் மூன்றாம் உலகப் போர் வெடித்திருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை

மார்ச் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?