Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

வாழ்க்கைச் செலவு உயர்வால் லிஸ்பனில் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 21, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வாழ்க்கைச் செலவு உயர்வு, தீவிரமடைந்து வரும் வீட்டுவசதி நெருக்கடி மற்றும் குறைந்த ஊதியம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனின் மத்திய பகுதியில் சனிக்கிழமை (21.11.2026) பலத்த மழைக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போர்த்துக்கல்லின் மிகப்பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான CGTP ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில், ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை உயர்த்த வேண்டும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்க வேண்டும், மேலும் வீட்டுவசதிச் செலவுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

குடைகளைப் பிடித்தவாறும் மழைக்கோட்டுகளை அணிந்தவாறும் லிஸ்பனின் இரண்டு பிரதான வீதிகள் வழியாகப் பல ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றதாக CGTP தெரிவித்துள்ளது.

எனினும், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை குறித்துப் பொலிஸார் எவ்வித மதிப்பீட்டையும் வெளியிடவில்லை.

மத்திய-வலதுசாரி அரசாங்கத்தின் கொள்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாகத் தெரிவித்த 44 வயதான தொழிற்சாலைத் தொழிலாளி மானுவல் கோம்ஸ், தாம் அதிகமாக உழைத்தாலும் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், அன்றாட வாழ்க்கைக்குப் பணமில்லை என்றும் கூறினார்.

ஊதியம் குறைவாக உள்ள நிலையில் டீசல், பெற்றோல் மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட அனைத்தினதும் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

யூரோஸ்டாட் (Eurostat) தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் போர்த்துக்கல்லின் சராசரி ஆண்டு வருமானம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரியை விட 37 சதவீதம் குறைவாக இருந்தது.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் உணவு மற்றும் எரிசக்தி விலைகளால் கடந்த ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 3.8 சதவீதத்தை எட்டியது.

மேலும், ஐரோப்பாவின் மிகக் கடுமையான வீட்டுவசதி நெருக்கடிகளில் ஒன்றை போர்த்துக்கல் எதிர்கொண்டுள்ளது.

2017ஆம் ஆண்டிலிருந்து வீடுகளின் விலைகள் இருமடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், புதிய வாடகை வீடுகளின் கட்டணமும் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து இளைய தலைமுறையினரைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

சாதாரண மக்களை விடப் பெரும் நலன்களுக்காகவே அரசாங்கம் செயற்படுவதாகக் குற்றம் சாட்டிய 66 வயதான ஓய்வுபெற்ற தகவல் தொழில்நுட்பப் பணியாளர் லூயிஸ் ருஸ்ஸோ, அதிக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கோரியும் வாடகைச் சந்தையின் ஊக வணிகத்திற்கு எதிராகவும் தாம் போராடுவதாகத் தெரிவித்தார்.

லிஸ்பன் மற்றும் போர்டோ நகரங்களில் வீட்டுவசதி செயற்பாட்டாளர்களின் கூடாரப் போராட்டங்கள் உட்படப் பல வாரங்களாக நிலவி வந்த அமைதியின்மையைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கைச் செலவு மற்றும் வீட்டுவசதி தொடர்பாக ஐரோப்பா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ள நிலையில், பிரான்ஸில் சனிக்கிழமை நடைபெற்ற அமைதியான போராட்டங்களில் முந்தைய வாரங்களை விடக் குறைவானவர்களே பங்கேற்றிருந்தனர்.

முந்தைய செய்தி காசாவில் லொறி மீது இஸ்ரேல் தாக்குதல்: மூவர் பலி
அடுத்த செய்தி ஈராக் மின் நிலையத்தில் தீவிபத்து: நால்வர் பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த 274 பேர்

மே 22, 2026
உலகம்

காஸா நிவாரண முகாம்களில் 6 வாரங்களில் 798 பேர் பலி!

ஜூலை 13, 2025
உலகம்

நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரைன் பயன்படுத்துவதற்கு ஜோ பைடன் அனுமதி!

நவம்பர் 18, 2024
உலகம்

அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமைக்குக் கட்டுப்பாடு – மீண்டும் அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!

ஆகஸ்ட் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?