Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காசாவில் லொறி மீது இஸ்ரேல் தாக்குதல்: மூவர் பலி

நவம்பர் 21, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

காசா நகரில் சனிக்கிழமை (21.11.2026) இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் லொறி ஒன்றிலிருந்த மூவர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த லொறியில் உணவுப் பொருட்களும் ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ (World Central Kitchen) தொண்டு நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட ஆவணங்களும் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின் பின்னர், வாகனத்திலிருந்த சமைத்த சோற்றுப் பொதிகளில் அந்தத் தொண்டு நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட தாள்கள் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், தாக்குதலுக்கு உள்ளான வாகனம் தமது நிறுவனத்துடன் தொடர்புடையதல்ல என ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த வாகனத்தின் சாரதி முன்னர் தமது நிறுவனத்தில் பணியாற்றியவர் என்றும், வாகனத்திலிருந்த ஏனைய இருவரும் தமது பணியாளர்கள் அல்ல என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, அப்பகுதியிலிருந்த இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளை இலக்கு வைத்தே தமது படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், அந்த வாகனம் அமைப்பின் உறுப்பினர்களுக்கு உணவு கொண்டு சென்றதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் இந்தக் கூற்றை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளதுடன், இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பும் இது குறித்து உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

முன்னதாக இவ்வாரத்தில், ஹமாஸ் தளபதி ஒருவரை இலக்கு வைத்து வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டனர்.

2025 அக்டோபரில் அமெரிக்க ஆதரவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்தம் பாரிய மோதல்களை நிறுத்தியிருந்தாலும், காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தடுக்கவில்லை.

அதன்பின்னர் இதுவரை குறைந்தது 1,600 பலஸ்தீனியர்களும் ஐந்து இஸ்ரேலியப் படைவீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது காசாவின் சுமார் மூன்றில் இரண்டு பகுதி இஸ்ரேலியப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கடற்கரையோரத்தின் சிறிய பகுதியே ஹமாஸ் வசம் உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பசிப் பட்டினி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

2023 அக்டோபரில் ஹமாஸ் தலைமையிலான போராளிகள் 1,200 பேரைக் கொன்று 250-க்கும் மேற்பட்டோரைப் பணயக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதைத் தொடர்ந்து, தற்காப்புக்காகவே தாம் செயற்படுவதாக இஸ்ரேல் தெரிவித்து வருகின்றது.

முந்தைய செய்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!
அடுத்த செய்தி வாழ்க்கைச் செலவு உயர்வால் லிஸ்பனில் ஆர்ப்பாட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

துருக்கியில் வலுவான நிலநடுக்கம்

ஜனவரி 24, 2026
உலகம்

எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மலையேறி

ஜூன் 5, 2026
உலகம்

காஸா நகரத்தை ஆக்கிரமிக்க தரைவழித் தாக்குதல்கள் ஆரம்பம்!

ஆகஸ்ட் 21, 2025
அண்மைய செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் – சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் முயற்சி!

அக்டோபர் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?