Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

கனடியன் பிரீமியர் லீக் கால்பந்து இறுதிப்போட்டி – மீண்டும் மோதும் கால்கரி, ஒட்டாவா!

நவம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் கனடியன் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டியில், கால்கரி கேவலரி எஃப்.சி. அணியும் அட்லெடிகோ ஒட்டாவா அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் பனிப்பொழிவுக்கு மத்தியில் கால்கரியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற ஒட்டாவா அணி, இம்முறையும் தனது பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்குகிறது.

அதேவேளை, கடந்த ஆண்டுத் தோல்விக்குப் பதிலடி கொடுத்து இரண்டாவது முறையாகச் சம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் கால்கரி அணி உள்ளது.

குறிப்பாக, இந்தப் பருவத்தின் வழக்கமான போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து CPL Shield விருதையும் வென்றுள்ள கால்கரி அணி, இன்று வெற்றிபெற்றால் ஒரே பருவத்தில் இரண்டு முக்கிய கிண்ணங்களையும் வென்ற முதல் அணியாக வரலாறு படைக்கும்.

மறுபுறம், ஒட்டாவா அணி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டும் North Star Cup சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இரு அணிகளும் அரையிறுதிப் போட்டிகளில் கடுமையான போட்டிகளுக்குப் பின்னரே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இறுதிப்போட்டி கால்கரியின் சொந்த மைதானமான ATCO Field-இல் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிறது.

கால்கரியில் நிலவும் கடும் குளிரும் மைதானத்தின் நிலையும் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பனிப்பொழிவுக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப்போட்டியைப் போலவே, இந்த ஆண்டும் இரு அணிகளுக்கும் இடையிலான மோதல் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் மகளிர் ஹொக்கி அணிக்கு புதிய சவால் – 12 அணிகளாக விரிவடையும் PWHL!
அடுத்த செய்தி நெல்லியடியில் ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வுகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

செப்டம்பர் 20, 2025
Uncategorizedவிளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு!

டிசம்பர் 25, 2025
விளையாட்டு

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அர்செனல் அணி முதலிடம்!

டிசம்பர் 4, 2025
விளையாட்டு

இலங்கை – சிம்பாப்வே அணிக்கு இடையிலான முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று!

செப்டம்பர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?