சுற்றுலா இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஏற்கனவே, இரண்டு அணிகளுக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித்தொடரில் இலங்கை 2-0 என்று கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், இன்று 20க்கு20 போட்டிகளில் பங்கேற்கிறது.
குறித்த போட்டியானது ஹராரே மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி செப்டம்பர் 6ஆம் திகதியும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி செப்டம்பர் 7ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
