Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

நுனாவிக்கில் பொலிஸ் தலையீட்டுக் குழு விரிவாக்கம்

நவம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு கியூபெக் பிராந்தியமான நுனாவிக்கில் (Nunavik) பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் இன்யூட் (Inuit) மக்களுக்கும் பொலிஸ் சேவைக்கும் இடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையைப் போக்கும் நோக்கில், சமூகப் பணியாளர்களையும் பொலிஸ் அதிகாரிகளையும் இணைத்துச் செயற்படும் ‘சகிஜுக்’ (Saqijuq) நடமாடும் தலையீட்டுக் குழுக்கள் (MIT) விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

பொலிஸாரின் தலையீடு, கைதுகள் மற்றும் பலப்பிரயோகம் ஆகியவற்றைக் குறைக்கும் நோக்கில், இன்யூட் மக்களால் வழிநடத்தப்படும் சகிஜுக் அமைப்பு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், புவிர்னிதுக் (Puvirnituq), குஜுவாக் (Kuujjuaq) மற்றும் அண்மையில் சல்லூயிட் (Salluit) ஆகிய பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைத் தடுப்பு, குடும்ப வன்முறை, உளநல நெருக்கடிகள் மற்றும் ஆபத்தான சூழலில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் இக்குழு கவனம் செலுத்துகிறது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன.

2024 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 26 வயதான ஜோசுவா பாபிகாடுக் (Joshua Papigatuk) உயிரிழந்ததுடன், அவரது இரட்டைச் சகோதரர் கார்னெட் படுகாயமடைந்தார்.

இச்சம்பவத்திற்கு எதிராக கியூபெக் மாகாணம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதேபோல், கங்கிக்சுவாலுஜுவாக் (Kangiqsualujjuaq) பகுதியில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மார்க் ஆர். அன்னனாக் (Mark R. Annanack) என்பவரின் குடும்பத்தினரும் பொலிஸ் சேவையில் மாற்றங்களைக் கோரி வந்தனர்.

இந்நிலையில், இம்மாதம் கியூபெக் மாகாண முதல்வர் பிளமண்டன் மற்றும் அமைச்சர்களுக்கு பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினரும் அனுப்பியுள்ள அறிக்கையில், “உள்ளூர் நீதி மற்றும் பொலிஸ் சேவைகளை முழுமையாக மறுசீரமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடா – சீனா வர்த்தகம் தொடர்பில் டிரம்ப்புக்கு பிரச்சினையில்லை: பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி மொன்றியலில் மெட்ரோ நிலையம் மீது தாக்குதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நயினாதீவு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்

ஜூன் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் கவனர்யீர்ப்பு போராட்டம்

நவம்பர் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கண்டியில் 36 மணிநேர நீர்வெட்டு!

மே 28, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

செவ்வாழைப்பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் ….

மார்ச் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?