ஆர்ஜென்டீனாவின் புவெனஸ் அயர்ஸ் நகரில் திங்கட்கிழமை (09.11.2026) நடைபெற்ற திறந்தவெளித் திருப்பலியில் சுமார் 25 இலட்சம் மக்கள் கலந்துகொண்டு பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களில் ஆர்ஜென்டீனாவுக்கு போப் ஒருவர் மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவென்பதுடன், தென்னமெரிக்காவில் கத்தோலிக்கத் திருச்சபையின் பலத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக போப் லியோ தெரிவித்துள்ளார்.
நகரின் முக்கிய வீதியான அவெனிடா டெல் லிபர்டடோர் (Avenida del Libertador) பகுதியில் மைல் கணக்கில் திரண்டிருந்த மக்கள், வத்திகான் கொடிகளை அசைத்து போப் லியோவை வரவேற்றனர்.
சமீபகாலமாக தென்னமெரிக்காவில் கத்தோலிக்கத் திருச்சபை தனது செல்வாக்கை இழந்து வரும் நிலையில், மக்களின் இந்த நம்பிக்கையைக் கண்டு தனது இதயம் மகிழ்ச்சியடைவதாகத் திருப்பலிப் பிரசங்கத்தில் போப் லியோ குறிப்பிட்டார்.
71 வயதான போப் லியோ, நுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குள் 50 நிகழ்வுகளை உள்ளடக்கிய மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (08.11.2026), ஆர்ஜென்டீன அதிபர் ஜேவியர் மிலேவைச் சந்தித்த போப் லியோ, அரசின் சிக்கன நடவடிக்கைகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும், தலைவர்கள் தங்கள் அதிகாரத்தின் எல்லையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
மேலும், திங்கள்கிழமை நடைபெற்ற திருப்பலியின் போது, ஆர்ஜென்டீனக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்தும் போப் லியோ தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
