கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றுள்ளன.
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கனேடியப் பொருட்கள் மீதான வரிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், கனடாவின் வர்த்தக உறவுகளை அமெரிக்காவை மட்டும் சார்ந்திருக்காமல் ஏனைய சர்வதேச சந்தைகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதன் முக்கிய நோக்கங்கள் புதிய முதலீடுகளை ஈர்ப்பது, ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் கனடாவின் பொருளாதாரத்தைப் பல்வகைப்படுத்துவது என்பனவாகும்.
