மொன்றியலில் காணொளி அழைப்பில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்ட 45 வயதுடைய பெண்ணின் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 33 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது பணியிடத்துடன் காணொளி அழைப்பில் தொடர்பில் இருந்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பின்னர் உயிரிழந்துள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை நிலை மற்றும் சந்தேகநபரின் மரணத்திற்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
