அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எரிசக்தி வர்த்தக உறவுகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக கியூபெக்கின் முன்னாள் நியூயோர்க் பிரதிநிதி கத்தரின் லூபியே தெரிவித்துள்ளார்.
மொன்றியலில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்காவுடனான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதுடன், கனடாவின் எரிசக்தி ஏற்றுமதிக்கான புதிய சந்தைகளையும் தேடுவது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக வரிகள் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் உடனடியாக நீக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, ட்ரம்ப் தனது பதவிக்காலத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகளிலும் America First கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் கனடா தனது எரிசக்தி ஏற்றுமதியைப் பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கியூபெக்கின் நீர்மின்சார ஏற்றுமதி மற்றும் அமெரிக்கச் சந்தையுடனான தொடர்புகள் தொடர்பிலும் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
