மொன்றியல் நகரின் முக்கிய பொதுப் போக்குவரத்துச் சேவையான மெட்ரோவின் Orange Line பகுதியில் இன்று காலை திடீர் சேவைத் தடை ஏற்பட்டது.
மின்சார உபகரணத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, Henri-Bourassa மற்றும் Montmorency ஆகிய நிலையங்களுக்கு இடையில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக மொன்றியல் பொதுப் போக்குவரத்து நிறுவனம் STM அறிவித்தது.
இன்று காலை சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தடையால் வேலைக்குச் செல்லும் பயணிகள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
காலை நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தடையால் பயணிகள் மாற்றுப் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
