Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் இணையவழி சூதாட்டம் அதிகரிப்பு!

நவம்பர் 5, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் ஒட்டுமொத்த சூதாட்டம் குறைந்துள்ள போதிலும், இணையவழி சூதாட்டம் (Online Gambling) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மொன்றியல் பொதுச் சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

மொன்றியல் பொதுச் சுகாதாரப் பிரிவு மற்றும் கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தின் சூதாட்டம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் தலைமை அதிகாரி சில்வியா கைரூஸ் (Sylvia Kairouz) இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் 8,500 மொன்றியல் பகுதி பெரியவர்களிடம் நடத்தப்பட்ட கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த எட்டு ஆண்டுகளில் இணையவழி சூதாட்டம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாக இருந்த இணையவழி சூதாட்டம், 2025 ஆம் ஆண்டில் 13.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குறுகிய காலத்தில் இவ்வளவ பெரிய உயர்வு ஏற்படுவது வழக்கத்திற்கு மாறானது என கைரூஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, குறைந்தது ஒருவகை சூதாட்டத்திலாவது ஈடுபடும் பெரியவர்களின் எண்ணிக்கை 2018 இல் 54 சதவீதமாக இருந்த நிலையில், 2025 இல் 39 சதவீதமாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளம் ஆண்கள் இணையவழி சூதாட்டங்களில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

இணையம் மற்றும் நேரில் விளையாடப்படும் ஸ்லாட் மெஷின்கள், விளையாட்டுப் பந்தயங்கள் (Sports betting) மற்றும் போக்கர் (Poker) போன்ற அதிக ஆபத்துள்ள விளையாட்டுகள் ஆண்களை அதிகம் ஈர்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையாகும் பிரச்சனை 4.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இது, இதுவரை 3 சதவீதத்தைத் தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி மற்றும் நேரத்தைச் சுயமாகக் கட்டுப்படுத்த முடியாமல் போவதே இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாகும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் இளைஞர் சூதாட்டப் பிரச்சனைகள் தொடர்பான சர்வதேச மையத்தின் பணிப்பாளர் ஜெஃப் டெரெவென்ஸ்கி (Jeff Derevensky), விளம்பரங்கள் மற்றும் பிரபலங்களின் ஆதரவு ஆகியவை நிலைமையை மோசமாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலைகளில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி கன்சர்வேடிவ் ஆட்சியில் மார்க் கார்னியை இணைக்க முயன்றேன்: முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்!
அடுத்த செய்தி பருவமழைக் காலத்திலும் நாகப்பட்டினத்திற்கான கப்பல் சேவை தொடர்ந்து இயங்கும்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள பிராந்தியக் குறியீடு

மே 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சாடிய வவுனியா மாநகரசபை உறுப்பினர்

பிப்ரவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிகண்டியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீ!

அக்டோபர் 2, 2025
கியூபெக்

லோங்குயேவில் பாலியல் குற்றச்சாட்டு – மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்

செப்டம்பர் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?