Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சாடிய வவுனியா மாநகரசபை உறுப்பினர்

பிப்ரவரி 1, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

30 வருடமாக ஆயுதமேந்திப் போராடியவர்களை பயங்கரவாதிகள் எனக் கூறி ஆயுதமேந்தி போராடியதை ஏற்க மாட்மாட்டோம் எனக் கூறியவர் தலைமையில் கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்பது அவரது அரசியல் வேட்கைக்கான போராட்டம் என வவுனியா மாநகரசபையின் எதிர்கட்சி உறுப்பினர் சு.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நெடுங்கேணியில் கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

எமது நிலம் எமக்கு வேண்டும் என்பது 30 வருடங்களுக்கு முதலே எமது உறவுகள் கேட்ட வார்த்தை. எமது மண் எமக்கு வேண்டும் எனக் கூறி அகிம்சை வழியிலும், ஆயுதமேந்தியும் போராடியவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அவர்கள ஆயுதமேந்திப் போராடியதை ஒரு வகையிலும் ஏற்க மாட்டோம் என பொது வெளியிலும், ஊடகங்களிலும் வெளியிட்டவரின் தலைமையில் கிபுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது.

போராடியவர்கள் பயங்கவரதாதிகள் என முத்திரை குத்திவிட்டு அவர்களது பெற்றோர்களையும், உறவினர்களையும் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பது வேடிக்கையான விடயம். மீண்டும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தி எமது மக்களுக்கு பிரச்சனைகளை ஏறபடுத்தப் பார்க்கிறார்கள்.

இவர்கள் அந்நிய சக்திகளால் ஏவிவிடப்பட்ட கைக் கூலிகள். எமது போராட்டம் மழுங்கடிக்கப்பட்டதும் அவர்களால் தான். இவர்கள் பல வழிகளில் தென்னிலங்கையுடன் உறவுகளைக் கொண்டாடிக் கொண்டு யுத்தத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் போராட்டத்திற்கு அழைத்து பலிகடாய் ஆக்கப் பார்க்கிறார்கள்.

தமிழ் எனக் கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் சிதைந்து ஒற்றுமையற்று இருக்கிறாத்கள். 16 வருடங்கள் வீணாகி போயுள்ளது.

போராட்டம் சிதைவடைந்த பின்பு அனைத்து கட்சிகளும் இணைநிது ஒன்றாக இருந்திருந்தால் எமக்கு ஏதாவது ஒரு முடிவு கிடைத்திருக்கும். மக்களால் விரட்டப்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் தற்போது ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த பலர் காணாமல் போய்விட்டார்கள். சிதைக்கப்பட்டுள்ளார்கள். நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

இதற்கெல்லாம் காரணமாக இருந்த தமிழ் தலைமையை ஏற்க முயற்சி எடுக்கிறார்கள். மீண்டும் ஒற்றுமையாக வருவது சந்தோசம். ஆனால் உங்களது உறவுகள் உங்கள் குடும்பத்தினர் எங்கே? அவர்களையும் கூட்டி வந்து நெடுங்கேணியில் போராடுங்கள். நாங்களும் வருகின்றோம். ஆனால் அப்பாவி மக்களை அழைத்து போராடி உங்கள் அரசியல் வேட்கையை தணிக்க முயலாதீர்கள்.

இவர்களின் தலைமையில் போராட முயல்வது உங்களை பிள்ளைகளை நீங்களே பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியதற்கு சமனாகும். தமிழர் தாயக கட்சியான கூட்டமைப்புக்குள் அழையா விருந்தாளியாக வந்து எமது மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த தலைவரால் உருவாக்கப்படட தமிழ் தேசியக கூட்டமைப்பை இல்லாதொழித்து, தமிழரசுக் கட்சியை சிதைத்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றி தாயாக போராட்டம், இனப்பிரச்சனை இல்லை எனக் கூறி காணாமல் போனாவர்கள எனக் கூறும் அனைவரும் புலிப்பயங்கரவாதிகள் எனக் கூறி முதலமைச்சராக ஒரு கையெழுத்து இட்ட பின் நிர்ததியாகும் நிலை உருவாகும்.

எனவே தவறான ஒருவரின் கையில் முதலமைச்சர் பதவி போகும் போது ஒரு கையெழுத்து தமிழர் வரலாற்றை புரட்டி போடும். அதற்கானஏற்பாடே இந்தப் போராட்டம். எனவே மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மாங்குளத்தில் வாகன விபத்து
அடுத்த செய்தி யாழிற்கு எடுத்து வரப்பட்ட உலக கிண்ணம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னார் தீவில் மக்களை பாதிக்கும் உற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது – மார்க்கஸ் அடிகளார்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்.எம்.ஆலாம் கோரிக்கை

டிசம்பர் 12, 2025
இலங்கை

முன்னாள் அமைச்சரின் பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தக் கோரி மனு தாக்கல்!

ஆகஸ்ட் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம்

மே 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?