கியூபெக் மாகாணத்தின் ஷெர்புரூக் (Sherbrooke) நகரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட தரவு மையத் (Data Centre) திட்டங்கள் மீது, உடனடியாகத் தற்காலிகத் தடை எதையும் விதிக்க முடியாது என ஷெர்புரூக் நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு மேலும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ஷெர்புரூக் மாநகர மேயர் மாரி-கிளாட் பிபோ (Marie-Claude Bibeau) அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் தரவு மையத் திட்டங்கள் மீது தற்காலிக முடக்கம் அல்லது தடை கொண்டுவருவதற்கான தனது எண்ணத்தை, ஷெர்புரூக் மேயர் மாரி-கிளாட் பிபோ வெளிப்படுத்தியிருந்தார்.
எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ முடிவை எடுப்பதற்கு, ஷெர்புரூக் நகராட்சி மன்றத்திற்கு இன்னும் சில காலம் தேவைப்படுவதாகவும், அதனால் உடனடியாக அத்தகைய தடை எதுவும் அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
