Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இளம் உயிர்களைப் பறிக்கும் வீதி விபத்துகள் – வைத்தியர் த.சத்தியமூர்த்தி ஆதங்கம்

நவம்பர் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வீதியை சாகசம் செய்யும் இடமாக கருதி, ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் இளைஞர்கள் , விபத்துக்குள்ளாகி உயிரிழப்பதாகவும், கடந்த மாதம் மாத்திரம் வடக்கில் 09 இளைஞர்கள் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் தொடர்பில் பணிப்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக வடமாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிக கவலையை ஏற்படுத்துகின்றன.

தற்கொலைகள் ஒருபுறமும், வீதி விபத்துகள் மறுபுறமும் பல குடும்பங்களிடமிருந்து பெறுமதியான இளம் உயிர்களைப் பறித்துச் செல்கின்றன.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் வடமாகாணத்தில் 9 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்த சம்பவங்களை அடையாளம் காண முடிகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அவதானிப்பின்படி, இளைஞர்கள் சம்பந்தப்பட்ட சில கடுமையான விபத்துகளில் மது அருந்துதல், அதிக வேகம் மற்றும் வீதியை சாகசம் செய்யும் இடமாகக் கருதும் ஆபத்தான மனப்பாங்கு முக்கியமான பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன.

விடுமுறை மற்றும் கொண்டாட்டக் காலங்களிலும் இத்தகைய ஆபத்தான நடத்தைகள் குறித்து அதிக கவனம் தேவை.

குறிப்பாக புதிய மோட்டார் சைக்கிள்களை வாங்கும் சில இளைஞர்கள் அவற்றின் வேகம் மற்றும் திறனைச் சோதிக்கும் விதத்தில் வீதிகளில் சாகசம் செய்ய முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது.

சட்ட வைத்திய நிபுணரின் மருத்துவ அனுபவத்தில், இவ்வாறான ஆபத்தான ஓட்டுநர் நடத்தையுடைய சிலர் பின்னர் கடுமையான விபத்துகளுக்கு உள்ளாகி சட்ட வைத்திய உடற்கூற்றுப் பரிசோதனைக்கு வரும் துயரமான நிலையும், அல்லது உயிர் தப்பினாலும் கடுமையான மூளைக் காயங்களுடன் நரம்பியல் சத்திரசிகிச்சைப் பிரிவில் நீண்டகால உடல் மற்றும் நரம்பியல் பாதிப்புகளுடன் சிகிச்சை பெறும் நிலையும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸார் கண்காணிப்பு, சோதனை மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சட்டம் மட்டும் உயிர்களைக் காப்பாற்ற முடியாது. ஒவ்வொரு வாகன ஓட்டுநரிடமும் பொறுப்புணர்வு உருவாக வேண்டும்.

* வீதி பந்தயத் திடல் அல்ல.
* வாகனம் ஓட்டும்போது தொலைபேசியில் காணொளி எடுப்பது , செல்பி எடுக்க வேண்டாம்.
* மது அருந்தியிருந்தால் வாகனத்தைத் தொடவே வேண்டாம்.
* தரமான தலைக்கவசத்தை முறையாக அணியுங்கள்.
* தேவையற்ற வேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனங்களை முந்தி செல்ல வேண்டாம்.
* பெற்றோர்களும் குடும்பத்தினரும் இளைஞர்களுடன் வீதிப் பாதுகாப்பைப் பற்றித் தொடர்ந்து பேசுங்கள்.

ஒரு விபத்து ஒரு இளைஞரின் உயிருடன் முடிவதில்லை. பெற்றோரின் கனவுகள், குடும்பத்தின் எதிர்காலம், நண்பர்களின் மகிழ்ச்சி அனைத்தையும் ஒரே நொடியில் மாற்றிவிடுகிறது.
வேகத்தில் வீரத்தைக் காட்ட வேண்டாம்.

பாதுகாப்பாக வீடு திரும்புவதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இருநாடுகளுக்கு அனுமதி மறுப்பு
அடுத்த செய்தி நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முல்லைத்தீவில் மணல் சுறண்டலுக்கு அனுமதி

டிசம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

காவல்துறையினரை அவமதிப்பதைத் தடை செய்யும் சட்டம்: மனு தள்ளுபடி!

நவம்பர் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு நோயின் தீவிரம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

ஆகஸ்ட் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டியின் திகதிகள் அறிவிப்பு

ஜூலை 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?