முல்லைத்தீவு மாவட்டத்தில் கனியவளத்திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்பட்ட பாரிய மணல் வளச்சுறண்டல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு பாவடைக்கல்லாறு பகுதியில் பாரியளவில் மணல் அகழ்வதற்காக கனியவளத்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இங்கு அகழப்படும் மணல்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு எந்தவகையிலும் பயன்படுத்தாமல் வெளிமாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில் மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்காமல், வெளி மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கும் இந்நடவடிக்கையினால் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத்தின் மணல் அகழ்வு ஒப்பதந்தாரரான மகாலிங்கம் தயாபரன் குறிப்பிட்டுள்ளார்.
உடையார்கட்டு பாவடைக் கல்லாறு பகுதியில் மணல் அகழ்வதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களும் அனுமதி வழங்கிய போதும் கனியவளத் திணைக்களம் தனக்கான அனுமதியினை வழங்கவில்லை.
இதற்கு முன்னர் வேறு இடங்களில் தனக்கான அனுமதி வழங்கப்டப்ட நிலையில் கனியவளத்திணைக்களத்தினால் தனக்கு அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வடமாகாண கனியவளத் திணைக்களத்தின் பணிப்பாளரின் உறவு முறையான ஒருவருக்கு உடையார்கட்டு பாவாடைக் கல்லாறு பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனது அதிகார செல்வாக்கினை பயன்படுத்தி தனது உறவினர் ஒருவருக்கு வழங்கியுள்ளமை இந்த ஆட்சியிலும் ஊழல் தொடர்கின்றது என்பதை ஊடங்களை அழைத்து தெரியப்படுத்தியுள்ளதுடன், உடையார்கட்டு குளத்திற்கு அருகில் குவிக்கப்பட்டிருக்கும் மணல் கும்பிகளையம் அழைத்துச் சென்று காட்டியுள்ளார்.


