கட்டுநாயக்க விமான நிலையத்தில் 200 மில்லியன் ரூபாய் மதிப்புடைய 20.7 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நால்வரில் இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதான குறித்த நபர்கள் பெங்கொங்கிலிருந்து கொழும்புக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


