Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

வசோன் தேர்தல் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – கியூபெக் லிபரல் கட்சி அதிரடி அறிவிப்பு

அக்டோபர் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள வசோன் (Vachon) தேர்தல் தொகுதியில் நீதித்துறை மறுவாக்கு எண்ணிகைக்குப் பிறகு வெளியான தேர்தல் முடிவுகளை எதிர்த்து, கியூபெக் லிபரல் கட்சி (PLQ) சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த மாகாணத் தேர்தலில் இத்தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளர் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குகள் செல்லாததாக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், லிபரல் கட்சி வேட்பாளர் Affine Lwalalika ஆரம்பத்தில் 10 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.

எனினும், பார்ட்டி கியூபெக்வா கட்சியின் (PQ) கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்ட நீதித்துறை மறுவாக்கு எண்ணிக்கையில், அந்தக் கட்சியின் வேட்பாளர் Stephan Fogaing மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, தேர்தல் ஆணையமான ‘எலெக்சன்ஸ் கியூபெக்’ (Élections Québec) உறுதிப்படுத்தியது.

தேர்தல் நாளன்று செல்லுபடியாகும் எனத் தீர்மானிக்கப்பட்ட பல வாக்குச்சீட்டுகள், நீதித்துறை மறுஎண்ணிகையின் போது நிராகரிக்கப்பட்டுள்ளதாக,  கியூபெக் லிபரல் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் சட்ட விதிகளுக்கு மாறாக, வாக்காளர்களின் உண்மையான நோக்கத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கியூபெக் லிபரல் கட்சித் தரப்பு கருதுகின்றமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி சமூக ஊடகங்களில் குழந்தைகளை பயன்படுத்தும் பெற்றோர்களுக்கு தண்டனை!
அடுத்த செய்தி 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீவிரமாகும் கியூபெக் சுதந்திர விவாதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட வாக்களிப்பில் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்பு!

செப்டம்பர் 29, 2026
1
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் ஸ்னோமொபைல் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 17, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஆபத்தில் மின்சார ஒப்பந்தம் கியூபெக் அரசு எச்சரிக்கை!

டிசம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஜூலை 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?