அல்பெர்ட்டா மாகாணத்தில் குடியேற்றம் மற்றும் தற்காலிகக் குடியிருப்பாளர்களுக்கான உரிமைகள் தொடர்பில் புதிய அரசியல் விவாதம் உருவாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மாகாண வாக்கெடுப்பில், குடியேற்றம் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் குறித்தும் மக்கள் வாக்களித்துள்ளனர். கனேடியக் குடிமக்கள், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மற்றும் மாகாணத்தால் அங்கீகரிக்கப்படும் குடியேற்ற நிலையைக் கொண்டவர்களுக்கு இடையிலான சேவை அணுகல் தொடர்பான கட்டுப்பாடுகள், தற்காலிகக் குடியிருப்பாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது போன்ற யோசனைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த முன்மொழிவுகள் தொடர்பாகக் குடியேற்ற உரிமைகளுக்காகச் செயல்படும் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகள் தற்காலிகத் தொழிலாளர்களைப் பாதிக்கலாம் என்றும், அவர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு நிலைமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேவேளை, மாகாணத்தின் பொதுச் சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் குடியேற்றத்தை நிர்வகிப்பதில் கூடுதல் அதிகாரத்தைப் பெறுவதற்கும் ஆதரவான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

