கியூபெக் மாகாணத்தின் 34ஆவது முதல்வராக பால் செயிண்ட்-பியர் பிளமொண்டன் பதவியேற்க உள்ளார். இதன் மூலம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எதிர்க்கட்சியாக இருந்த பார்ட்டி கியூபெக்வா மீண்டும் ஆட்சிக்கு வருகின்றமை முக்கிய அம்சமாகும்.
இதன்படி கடந்த அக்டோபர் 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், பார்ட்டி கியூபெக்வா 59 இடங்களைக் கைப்பற்றியது. பெரும்பான்மை ஆட்சிக்கு 64 இடங்கள் தேவைப்படும் நிலையில், இன்னும் ஐந்து இடங்கள் குறைவாக உள்ளன.
இதற்கிடையில், இரண்டு தொகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் கட்சி கோரியுள்ளது.
மேலும், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கனடிய மன்னருக்குப் பதிலாக கியூபெக் மக்களுக்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

