கியூபெக் மாகாணத்தில் காவல்துறையினரும் வீதிப் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து விசேட வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒக்டோபர் 22ஆம் திகதி வரை நடைபெறும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், வாகனச் சாரதிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், சைக்கிள் பயணிகள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து வீதிப் பயனாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாகும்.
குறிப்பாகப் பாடசாலைப் பகுதிகள் மற்றும் பாடசாலைப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படவுள்ளது. வீதிப் போக்குவரத்து விதிகளை மதித்து, மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பயணிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்
