மொன்றியல் நகரில், முன்னர் Molson மதுபானத் தொழிற்சாலை அமைந்திருந்த பகுதியில் புதிய நகர்ப்புற அபிவிருத்தித் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Quartier Molson எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், அடுத்த ஏழு முதல் பத்து ஆண்டுகளுக்குள் சுமார் ஐயாயிரம் குடியிருப்புகளை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் முதல்கட்டமாக, Chapitre எனப் பெயரிடப்பட்டுள்ள 27 மாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் 383 வாடகை வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இந்தக் குடியிருப்புகள் 2028ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய குடியிருப்புகளுடன் வர்த்தக வசதிகளையும் உள்ளடக்கிய இந்தத் திட்டம், மொன்றியல் நகரின் நகர்ப்புற வளர்ச்சியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
