Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் அரசியலில் புதிய சர்ச்சை – மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் கட்டாயமா?

அக்டோபர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் (Quebec) மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற பார்ட்டி கியூபெக்வா கட்சியின் (Parti Québécois – PQ) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இம்மாதம் 15ஆம் திகதி பதவியேற்கவுள்ளனர்.

பிரித்தானிய மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் செய்வதிலிருந்து விலக்களிக்கும் மாகாணச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலிலேயே, இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.

கியூபெக் கட்சியின் புதிய அமைச்சரவை இம்மாதம் 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

முன்னதாக 2022ஆம் ஆண்டு அறிவித்தது போலவே, பிரித்தானிய மன்னருக்கு விசுவாசமாக சத்தியப் பிரமாணம் செய்யப் போவதில்லை என்பதில், கியூபெக் கட்சியின் தலைவர் பால் சென்-பியர் பிலாம்பொண்டன் (Paul St-Pierre Plamondon) உறுதியாக உள்ளார்.

1867ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின்படி, கியூபெக் மாகாணச் சபை உறுப்பினர்கள் (MNAs) பிரித்தானிய மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கியூபெக் மாகாண அரசு ’Bill 4’ எனப்படும் மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றியது.

இதன் மூலம், பிரித்தானிய மன்னருக்கான விசுவாச சத்தியப் பிரமாணம் மாகாணச் சட்டமியற்றுபவர்களுக்குப் பொருந்தாது என்ற விதி சேர்க்கப்பட்டது.

எனினும், 2022ஆம் ஆண்டின் இந்தச் சட்டத்திற்கு எதிராக, சட்டப் பேராசிரியரான லாரன்ஸ் டேவிட் (Lawrence David) உள்ளிட்ட தரப்பினரால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கியூபெக் சட்டமன்றத்தில் புதிதாக உறுப்புரிமை பெற உள்ளவர்கள், பிரித்தானிய மன்னருக்குச் சத்தியம் செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில் அவசரத் தடை உத்தரவு கோரிய மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இம்மாதம் 19 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி கியூபெக் குடிவரவு விண்ணப்பதாரர்கள் 750 பேருக்கு தவறான File Closure அறிவிப்பு!
அடுத்த செய்தி கியூபெக் செப்-இலெஸ் நகரில் தீ விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது

டிசம்பர் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

சிறுமி மெலினா ஃபிராட்டோலினின் பெயரில் நிறுவப்பட்டுள்ள புதிய வீதிப் பெயர்ப்பலகைகள்

ஜூலை 28, 2026
கியூபெக்

மொண்ட்ரியல் நகர செயின்ட் பால் தேவாலய தீ விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

பிப்ரவரி 24, 2026
கியூபெக்

மொன்றியல் நகரின் மையப்பகுதியில் திரண்ட 25,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள்

மே 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?