திருகோணமலையில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவருவதற்காக கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, இன்று (11) அதிகாலை தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
ஹபரண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜக்கா பங்குவ பகுதியை அண்மித்த, A6 பிரதான வீதியின் 144ஆம் கட்டைப் பகுதியில் அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்தில் சம்பவம் இடம்பெற்றபோது சாரதியும் உதவியாளரும் மாத்திரமே இருந்துள்ளனர். இருவரும் எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலைக்கு வருகைதரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காகப் பேருந்து பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும், பேருந்து தீப்பற்றியதற்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
