Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

ஆகஸ்ட் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 03 ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10 ஆம் நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக, பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று, சுவாமி வெளிவீதி உலா வந்து வேத பாராயணங்கள் முழங்க, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்திற்கு மத்தியில் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாடு செய்தனர்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, ஸ்ரீ இராம பிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மையும் புகழும் மிக்க இப் புண்ணிய தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதுர்கடன் செலுத்தி ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.

இத் தீர்த்தோற்சவ நிகழ்வில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு மாமாங்கேஸ்வரரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

முந்தைய செய்தி மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும் – அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை
அடுத்த செய்தி கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா

மே 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வைத்தியசாலை பிண அறையின் குளிரூட்டி பழுது – வவுனியா வைத்தியசாலை நிர்வாகம்!

ஏப்ரல் 15, 2025
இலங்கை

புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் 2026

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள் மீட்பு

ஜூலை 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?