Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

த.வெ.க ஒரு கார்ப்பரேட் மாஃபியா: தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்!

அக்டோபர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு அரசியல் கட்சியே அல்ல எனவும், அது ஒரு கார்ப்பரேட் மாஃபியா என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, பிரம்மாண்டமான ரோடு ஷோவிலும் பங்கேற்று அவர் மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தவெகவில் இன்வெஸ்டிங் பார்ட்னர், வொர்க்கிங் பார்ட்னர், ஸ்லீப்பிங் பார்ட்னர், சீக்ரெட் பார்ட்னர் எனப் பெரிய கும்பலே செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.

அந்தப் பங்காளிகள் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும், தமிழ்நாட்டை நாசமாக்குவதே அந்தக் கும்பலின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய சட்டமன்றத்தின் மாண்பைச் சீர்குலைத்து, தேவையில்லாத சைகைகளைக் காட்டி அவையை நடத்துவதாக முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்தார்.

“நான் மிசாவில் சந்தித்த கொடுமைகளையெல்லாம் கிண்டல் செய்யும் இடமாகச் சட்டமன்றம் மாறியுள்ளது. மக்கள் மாண்புமிகு முதலமைச்சர் என்று அழைக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, Cheap Minister ஆக நடந்துகொள்ளக் கூடாது” என்றும் சாடினார்.

செய்தியாளர்களின் மைக் கண்டாலே முதலமைச்சருக்கு அலர்ஜி என்றும், தெருவிலும் சட்டமன்றத்திலும் கத்துவதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் கூறிய ஸ்டாலின், நாடு முழுவதும் பேசப்படும் தேர்தல் ஆணையர் விவகாரம் குறித்துப் பேச முதலமைச்சர் பயப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், தவெகவுக்கு வாக்களித்த மக்களே தற்போது புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முந்தைய செய்தி பஞ்சாப் எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர்கள் இருவர் சுட்டுக்கொலை
அடுத்த செய்தி ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

நீட் இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் – ஐஐடியில் பொறியாளராக நியமனம்

செப்டம்பர் 2, 2026
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்

மே 6, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

ஜூன் 24, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

பஹல்காம் தாக்குதலோடு தொடர்புடைய பாகிஸ்தான் இராணுவ முன்னாள் தளபதி…

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?