Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பிரேசிலில் உள்ள தூதரக சேவைகளை இடைநிறுத்திய அமெரிக்கா

அக்டோபர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரேசிலில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில், பாதுகாப்பு அச்சங்களைக் காரணம் காட்டி, அங்குள்ள தனது தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களின் சேவைகளை அமெரிக்கா வெள்ளிக்கிழமை இடைநிறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரேசிலில் உள்ள தனது தூதரகத்தை மூடியுள்ளதாக ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளது.

எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுடன் இந்த பாதுகாப்புப் பிரச்சினைகளை நேரடியாகத் தொடர்புபடுத்தாத அமெரிக்க வெளியுறவுத் துறை, அது குறித்து மேலதிக விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

எனினும், வெளிநாட்டுத் தலையீடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் மற்றும் வாஷிங்டனுக்கும் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் அரசாங்கத்திற்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் கவலைகள் குறித்து பிரேசில் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை, இந்த சேவைகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதைக் குறிப்பிடவில்லை.

மேலும், அவசர உதவிகளை நாடும் அமெரிக்கக் குடிமக்கள் தூதரகம் அல்லது துணைத் தூதரகப் பகுதிகளுக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து, பிரேசிலில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரகமும் வெள்ளிக்கிழமை மூடப்படும் என பிரேசிலுக்கான ஆஸ்திரேலியத் தூதர் சோஃபி டேவிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரேசிலில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகங்களைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் இந்தத் தூதரக மூடல் நடவடிக்கையானது முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்றும், பிரேசிலிய பொதுமக்களின் கருத்துகளில் செல்வாக்கு செலுத்த டிரம்ப் முயலும் வழிகளில் இதுவும் ஒன்று என்றும் லூலாவின் தொழிலாளர் கட்சியின் தலைவர் எடின்ஹோ சில்வா விமர்சித்துள்ளார்.

அதேவேளை, பிரேசில் தேர்தலில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலையீடுகள் இருப்பதாக பிரேசில் உளவுத்துறை அதிகாரிகள் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி பிரதிநிதிகளிடம் விளக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தேர்தல் தலையீட்டுக் குற்றச்சாட்டுகளை அமெரிக்க வெளியுறவுத் துறை நிராகரித்துள்ளது.

முந்தைய செய்தி Ottawa–Montréal 350 கிலோமீற்றர் பயணம் – Indigenous இளைஞர்கள் மற்றும் முதியவர்களை இணைக்கும் முயற்சி!
அடுத்த செய்தி ஸ்பெயினில் வீட்டுமனை நெருக்கடிக்கான அவசரச் சட்டமூலம் நிராகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

Uncategorizedஉலகம்

மொசாம்பிக் சிறைச்சாலையில் அமைதியின்மை

டிசம்பர் 26, 2024
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த வரியில் பெரும்பாலானவை சட்டவிரோதமானது!

ஆகஸ்ட் 31, 2025
உலகம்

காசா உதவிப் படகுகளை தடுத்து நிறுத்திய இஸ்ரேல்!

அக்டோபர் 2, 2025
1
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பதிவான நில அதிர்வு…

ஏப்ரல் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?