Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியல் மெட்ரோவில் 9 வயது பூர்வகுடிச் சிறுவன் மீது இனவெறித் தாக்குதல்

அக்டோபர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் நகரில் உள்ள சுரங்க ரயிலில் (Montreal Metro), பாரம்பரிய உடை அணிந்திருந்த 9 வயது பூர்வகுடிச் சிறுவன் ஒருவன் மீது பெண் ஒருவர் இனவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம்” கடைப்பிடிக்கப்பட்ட நாள் அன்று மொண்ட்ரியல் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கான்வாக்கே (Kahnawà:ke) பகுதியைச் சேர்ந்த மோஹாக் (Mohawk) பழங்குடியினக் குடும்பத்தைச் சேர்ந்த டெகாஹ்னேகேக் ஸ்டேசி (Tekahné:kake Stacey), தனது தாய், 9 வயது மருமகன் மற்றும் அவனது நண்பருடன் மொண்ட்ரியல் சிறுவர் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோதே, இத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ரயிலில் ஏறியதும், அங்கிருந்த பெண் ஒருவர் பூர்வகுடியினரின் போர் முழக்கங்களை கேலி செய்யும் வகையில் சத்தமிட்டுள்ளார்.

பின்னர் சிறுவனைப் பார்த்து அருவருப்பான வார்த்தைகளைப் பேசி, இனரீதியாக அவமதித்துள்ளார்.

பாரம்பரிய உடையில் இருந்த சிறுவனைக் கண்டு அப்பெண் கடும் வெறுப்பை வெளிப்படுத்தியதாக ஸ்டேசி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை ஸ்டேசி தனது கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்துள்ள நிலையில், அதில் அப்பெண் தொடர்ந்து கேலி செய்வதோடு, கேமராவை நோக்கி விரலை நீட்டி அச்சுறுத்துவதும் பதிவாகியுள்ளது.

தனது பழங்குடியின அடையாளத்தைக் குறித்து எப்போதும் பெருமிதம் கொள்ளும் தன் மருமகன், இந்தச் சம்பவத்தினால் பெரிதும் மனமுடைந்து போயுள்ளதாகக் கூறிய ஸ்டேசி, இச்சம்பவம் தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எதையும் எடுக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி மொண்ட்ரியலில் எபோலா அச்சம்: மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அடுத்த செய்தி டிரிஸ்கோல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக கியூபெக்கில் கூட்டு வழக்கு கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் குறைந்த வருமானத்தை பெறும் ஆங்கில இளைஞர்கள்

ஜூன் 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வேலையிழந்து நிர்க்கதியில் நிற்கும் மெக்சிகோ தொழிலாளர்கள்

பிப்ரவரி 2, 2026
கியூபெக்

மொன்றியலின் 9 முக்கிய வணிக வீதிகள் பாதசாரிகளுக்காக மட்டுமே திறக்கப்படும்

மே 27, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

குடும்ப வன்முறை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒன்டாரியோவில் கைது!

ஜூலை 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?