ஒக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்று Montréal பகுதியில் ஒப்பீட்டளவில் வெப்பமான வானிலை நிலவுகிறது.
Environment Canada தகவலின்படி, இன்று பகல் நேரத்தில் வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனவும் . Humidex காரணமாக உணரப்படும் வெப்பநிலை சுமார் 26 டிகிரி வரை இருக்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது
இன்று காலை முதல் தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன், சில நேரங்களில் 40 கிலோமீட்டர் வேகம் வரை காற்று அதிகரிக்கலாம்.
இன்று இரவு மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 17 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் அதேவேளை நாளை வெள்ளிக்கிழமை மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை சுமார் 16 டிகிரி வரை காணப்படும் .
அதன் பின்னர் சனிக்கிழமை வானிலை தெளிவாகி சுமார் 17 டிகிரி வெப்பநிலையும், ஞாயிற்றுக்கிழமை சுமார் 20 டிகிரி வெப்பநிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.

