Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தவெகவில் எந்தவொரு பிரச்சினையிலும் வெளிப்படை இல்லை: மார்க்சிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்

அக்டோபர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) எந்தவொரு பிரச்சினையிலும் வெளிப்படைத்தன்மையுடன் கருத்துகளை வெளிப்படுத்துவது இல்லை என்ற கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். முறைகேடுகளைக் கண்டித்து இடதுசாரிகள் சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தவெக கூட்டணியில் பாமக இடம்பெறுகிறதா என்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணியும் திருமாவளவனும் இதனை வதந்தி என்றே கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.  நாங்களும் இதனை வதந்தி என்றே நம்புகிறோம் என அவர் கூறினார்.

இருப்பினும், இக்கூற்றுக்கு தவெக தரப்பிலிருந்து எவ்விதப் பதிலும் வரவில்லையே எனக் கேட்டதற்கு, தவெகவைப் பொறுத்தவரையில் எந்தவொரு பிரச்சினையிலும் வெளிப்படைத்தன்மையுடன் கருத்துகளை வெளிப்படுத்துவதில்லை என்ற கொள்கையையே கடைப்பிடித்து வருவதாகவும், பாமக விஷயத்திலும் அதே கொள்கையையே அவர்கள் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக வேட்பாளர் கூறிய கருத்து குறித்துப் பேசிய அவர், ஆளும் கட்சி எதிர்கட்சிகள் இருக்கும் தொகுதிகளுக்கு எதுவும் செய்யாது என முதலமைச்சரை வைத்துக்கொண்டே கூறியதற்கு முதலமைச்சரே பதிலளிக்க வேண்டும் என்றார். அத்துடன், 8 கோடி மக்களுக்குமான முதலமைச்சர் என்ற முறையில் அனைத்துத் தொகுதிகளையும் உள்ளடக்கிய அணுகுமுறையே இருக்க வேண்டும் எனவும் பெ.சண்முகம் சுட்டிக்காட்டினார்.

முந்தைய செய்தி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
அடுத்த செய்தி விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சங்கர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

‘வந்தே மாதரம்’ சர்ச்சை: சோனியா காந்திக்கு அமித் ஷா கடும் கண்டனம்

ஆகஸ்ட் 16, 2026
இந்தியா

ஸ்ரீநகரில் தரை இறங்கியபோது கம்பத்தில் மோதிய விமானம்

செப்டம்பர் 4, 2026
இந்தியா

இந்தியாவில் பாரிய விபத்து – 13 பேர் பலி

மார்ச் 26, 2026
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்

மே 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?