பரசிட்டமோல் 650 வகை உட்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று, கடந்த மே மாதத்தில் தர ஆய்வை கர்நாடக சுகாதாரத்துறை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய பரசிட்டமோல் 650 வகை உள்ளிட்ட 14 நிறுவனங்கள் தயாரிக்கும் 14 வெவ்வேறு மாத்திரைகளுக்கும் மருந்துகளுக்கும் தடை விதிப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பு வைத்துள்ள மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் உடனடியாக உள்ளூர் மருந்து ஆய்வாளர் அல்லது உதவி மருந்து கட்டுப்பாட்டாளருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தடையை மீறி மருந்துகள் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.