மொண்ட்ரியால் நகருக்கு தென்கிழக்கே அமைந்துள்ள சாந்த-பிரிஜித்-டி’இபர்வில் (Sainte-Brigide-d’Iberville) பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்து குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த ஹெலிகொப்டர் விபத்தில், அனுபவம் வாய்ந்த பெண் விமானி உட்பட அதில் பயணித்த நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஹைவே 10 (Highway 10) பாதையை அடுத்துள்ள ‘ரங் டெ எக்கோசே’ (Rang des Écossais) பகுதிக்கு அருகில் உள்ள சோளக்காடு ஒன்றில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஹெலிகொப்டர் தரையிறங்க முயன்றபோதோ அல்லது திரும்பியபோதோ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகித் தீப்பற்றி எரிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து கியூபெக் மாகாணப் பொலிஸாரும் (Sûreté du Québec) போக்குவரத்துப் பாதுகாப்புச் சபையும் (TSB) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
