சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள அனோஜன் சிவராஜாவின் விடுதலையை வலியுறுத்தி, வவுனியா மாவட்ட தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கந்தசாமி கோவில் முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி பஜார் வீதி வழியாக தர்மலிங்கம் வீதியை சென்றடைந்து பின் கொரவப்பத்தான வீதி ஊடாக நகர பள்ளிவாயல் வரை சென்று நிறைவு பெற்று இருந்தது.
இன்றைய மதிய வழிபாட்டை அடுத்து இஸ்லாமியர்கள் குறித்த பேரணியில் இணைந்து கொண்டிருந்ததோடு அனோஜனின் விடுதலையை வலியுறுத்திய பாதைகளையும் தாங்கியிருந்தனர்.
இதன் போது இந்து, இஸ்லாமிய, பெளத்த மத தலைவர்களின் உரைகள் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் சவுதி அரேபிய தூதரகம், இந்திய தூதரகம் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜரிலும் கையொப்பம் இட்டமையும் குறிப்பிடத்தக்கது.


