Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

போர்ன்ஹப் இணையத்தளம் மீது விசாரணையை ஆரம்பித்துள்ள ஒஃப்கோம் ஆணையம்

செப்டம்பர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆபாச இணையத்தளமான ‘போர்ன்ஹப்’ (Pornhub), சிறுவர்கள் தனது தளத்தைப் பார்வையிடுவதைத் தடுப்பதற்கான தகுந்த வயதுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதா என்பது குறித்து, பிரித்தானியக் தொடர்பாடல் ஒழுங்குமுறை ஆணையமான ‘ஒஃப்கோம்‘ (Ofcom) உத்தியோகபூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மொண்ட்ரியாலின் கோட்-டெஸ்-நெய்கேஸ் (Côte-des-Neiges) பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் போர்ன்ஹப் தளத்தின் தாய் நிறுவனமான ‘அய்லோ‘ (Aylo) மீது இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ‘இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்‘ (Online Safety Act) வயதுக் கட்டுப்பாடுகளைச் சரியாக அமல்படுத்தாத தளங்களுக்கு எதிராக 18 மில்லியன் பவுண்டுகள் வரை அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் அமல்படுத்தப்பட்ட கடுமையான இணையப் பாதுகாப்புச் சட்டங்களைத் தொடர்ந்து, போர்ன்ஹப் தளம் அந்நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த மே மாதம் ஆப்பிள் (Apple) சாதனங்களில் உள்ள ‘சாதன மட்டத்திலான வயது உறுதிப்படுத்தல்’ (Device-level age verification) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 18 வயதிற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டும் தனது போர்ன்ஹப் சேவையை மீள வழங்குவதற்கு, அய்லோ நடவடிக்கை எடுத்தது.

இருப்பினும், இந்த புதிய முறையை அமல்படுத்துவதற்கு முன்னர் அய்லோ நிறுவனம் உரிய பரிசோதனைகளையோ அல்லது போதிய ஆய்வுகளையோ (Due diligence) மேற்கொள்ளவில்லை என்று, பிரித்தானியக் தொடர்பாடல் ஒழுங்குமுறை ஆணையமான ஒஃப்கோம் குற்றம் சாட்டியுள்ளது.

இதன் காரணமாக, சிறுவர்கள் இன்னமும் இந்த ஆபாச உள்ளடக்கங்களை அணுகும் அபாயம் நிலவுவதாக ஒழுங்குமுறை ஆணையம் கவலை வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் சுயாட்சி வாக்கெடுப்பு – இறுதி விவாதத்தில் சூடுபிடித்த சர்ச்சை
அடுத்த செய்தி பெல்லிவில்லி யூத ஜெப ஆலய துப்பாக்கிச் சூடு – புதிய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மறுசீரமைக்கப்படும் கியூபெக் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுச் செயல்முறை

டிசம்பர் 9, 2025
கியூபெக்

பதவி விலகுகின்றார் கியூபெக் கல்வி அமைச்சர் சோனியா லெபெல்

ஜனவரி 20, 2026
கியூபெக்

REM இன் அனைத்து இயக்கங்களையும் கண்காணிக்கும் பிரம்மாண்ட செயல்பாட்டு மையம் திறப்பு

மே 11, 2026
கியூபெக்முதன்மை செய்தி

Côte-des-Neiges பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல – இயன் லஃப்ரினியர்

ஜூன் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?