Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

செப்டம்பர் 23, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மாவட்ட கடற்பரப்பில் இடம்பெற்று வரும் கடற் கொள்ளையர்களின் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறையை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றைத் தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் படகுகளின் நிறங்களை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் கடற் கொள்ளை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சண்டியன் இல்லாத சந்தியில் நொண்டியனும் சண்டியனாம்” மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடற்கொள்ளை என்பது மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் பிரதேச மக்களுக்கு நன்கு தெரியும்.

கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையாகப் பேசுவதற்குக்கூட அச்சம் நிலவியது, தற்போது இவ்விடயம் தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை மிகவும் அவதானத்துடன் அணுகி வருகின்றோம்.

கடற் கொள்ளையர்கள் தொடர்பாக தகவல் தமக்குக் கிடைத்தவுடன், பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து உடனடியாகக் கலந்துரையாடினேன். இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினருடன் மேலும் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிய படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற் கொள்ளை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்தப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தற்போது நடவடிக்கைகள் வருகின்றன.

அத்துடன், சிறிய படகுகளை இலகுவாக அடையாளம் காணக்கூடிய வகையில் அவற்றின் நிறங்களை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்பதோடு, இந்த நடைமுறைகள் கூடிய விரைவில் அமுல்படுத்தப்படும்.

இவ்வாறான நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம், சட்டவிரோதமாகக் கடற் கொள்ளையில் ஈடுபடுகின்றவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுடன், சட்டபூர்வமாகக் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

இதேவேளை, கடற் கொள்ளைச் சம்பவங்களுடன் சில பாதுகாப்புப் படையினரும் தொடர்புபட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கும்போது, பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த சிலர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மீனவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது.

எனினும், இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படையினர் எந்தப் பிரதேசத்தில் பணியாற்றுகின்றனர், அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சரும் தெரிவித்துள்ளார்.

மேலும், மீன்பிடிப் படகுகளில் பயன்படுத்தப்படும் VMS கண்காணிப்பு முறைமை தொடர்பிலும் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதோடு, மீனவர்களின் நடைமுறைச் சிக்கல்களையும் கருத்திற்கொண்டு, VMS தொடர்பில் நெகிழ்வான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கங்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி, கூடிய விரைவில் பொருத்தமான தீர்மானமொன்று எடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை
அடுத்த செய்தி தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளுக்கு படகு சேவை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நாளை முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு!

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மனைவியை பார்க்க மண்டபம் முகாமிற்கு சென்ற யாழ் இளைஞன் புழல் சிறையில் அடைப்பு!

நவம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் முன்னெடுப்பு !

ஆகஸ்ட் 15, 2025
இலங்கைமுதன்மை செய்தி

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?