கியூபெக் மாகாண அரசு, குறைந்தபட்ச பெட்ரோல் விலையை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளது.
பெட்ரோல் விற்பனையில் போட்டியை அதிகரிப்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த நடவடிக்கையின் மூலம் கியூபெக் மாகாணத்தில் வசிக்கும் மக்கள், குறைந்த விலையில் பெட்ரோல் வாங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியூபெக் பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெஷெட் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெட்ரோல் மற்றும் பிற எரிபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நீக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை பொருளாதாரம் மற்றும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.