இன்றைய நாளில் இரண்டாவது தடவையாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இன்று மதியம் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று மாலை 5,000 ரூபாயால் அதிகரித்து, தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் தற்போது, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில், தங்க விலை அதிகரிப்பு தொடர்பில் செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள், தங்கத்தின் விலை எதிர்வரும் காலங்களில் 4 இலட்சத்தை எட்டலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
