2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தி வருகின்றார்.
நிதி அமைச்சு மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவசர காலசட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அவர் பல கருத்துக்களை முன்வைத்த நிலையில்,
அவசர காலதடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதை நாம் அடக்குமுறையாக பிரயோகிக்கவில்லை
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் எமது அன்பான உறவுகளை நாம் இழந்துள்ளோம். அத்துடன் உயிரிழந்தவர்களை மீளக் கொண்டு வர முடியாது என்றாலும், தப்பிப் பிழைத்தவர்களுக்கு ஒரு சிறந்த தேசத்தை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த முடியும்
தற்போதைய அனர்த்த நிலைமை நாட்டை ஒன்றிணைத்துள்ளது , நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் நிவாரணப் பணிகளை செய்வதற்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்துள்ளார்கள் என்றும்
தற்போதைய அனர்த்த நிலைமையின் போது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், கடமையின் போது உயிர்த்தியாகம் செய்தவர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் வெளியிட்டார்.
அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
பாரிய அர்ப்பணிப்பகளை மேற்கொண்ட முப்படையினருக்கு நன்றிகளைகளையும் பாராட்டையும் அவர் தெரிவித்தார்.
கலா ஓயாவில் இடம்பெற்ற பஸ் அனர்த்தத்தில் இருந்து 67 பேரை பாதுகாப்பாக மீட்க கடும் முயற்சி செய்திருந்தமையும் சுட்டிக்காட்டதக்கது.
தொடர் சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் பலர் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். ஆனால் சிலர் நிமைலமையை புரிந்து கொள்ளாது பேஸ்புக்கில் மக்களை தவறாக வழிநடத்தும் விதமாக பதிவுகளை போட்டிருந்தார்கள் எனவும்
விமானப்படைவீரர் தன்னுடைய உயிரையும் பெரிதாக எண்ணாமல் மக்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்துள்ளார்.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு.. *வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு 25000 ரூபா , அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு 50,000 ரூபா, வீடுகள் இல்லாதவர்களுக்கு வாடகை வீட்டுக்கு மாதந்தம் 25,000 ரூபா (6 மாதங்கள்) 3 மாதங்களுக்கு வாழ்வாதார வழிக்கு 50,000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி 2026இல் விதிக்கப்படாது என்றும், 2027 இல் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், இது IMF க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


