Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நோர்வேயுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும் கனடா!

செப்டம்பர் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரஷ்யாவின் புதிய அச்சுறுத்தல்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பின்மை அதிகரித்து வரும் சூழலில், ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் நோர்வேயுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதற்கு கனேடிய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் ஒட்டாவாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோரே (Jonas Gahr
Støre) ஆகியோருக்கு இடையிலான உயர் மட்ட சந்திப்பின் போது இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நோர்வேயின் பாரிய அரசுசார் இறையாண்மை நிதியத்திலிருந்து (sovereign wealth fund) கனடாவில் முதலீடுகளை ஈர்ப்பதுடனும், பசுமை சக்தி (green energy), முக்கியமான கனிமங்கள் (critical minerals) மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.

ஒட்டாவாவில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, ஆர்க்டிக் நாடுகளுக்கு இடையிலான
ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க அவசியமானது என சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, உளவுத்துறை தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, ஆர்க்டிக் பிராந்தியக் கண்காணிப்பு, விண்வெளி மற்றும் நீருக்கடியிலான

தொழில்நுட்பத் திறன்களை கூட்டாக மேம்படுத்துவது ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவுள்ளன. கனடா தனது கடற்படைக்காக 12 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்யும் திட்டத்தில் ஜெர்மனி மற்றும் நோர்வேயின் கூட்டுப்பங்களிப்புடன்
கூடிய நிறுவனத்தை தேர்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தக்கூடும் என போலந்து பிரதமர் விடுத்த எச்சரிக்கை
குறித்து, கனேடிய ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த நோர்வே பிரதமர் ஸ்டோரே, நோர்வே உளவுத்துறை
அறிக்கைகளின்படி சதிவேலைகள் (sabotage) உட்பட ஹைபிரிட் (hybrid) தாக்குதல்களுக்கான உண்மையான அச்சுறுத்தல்கள் நிலவுவதாக
உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, இந்த எச்சரிக்கையை தாம் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!
அடுத்த செய்தி 22ஆவது திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நேர்மையான அரச சேவையை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடைபவனி!

ஜூலை 28, 2026
கனடாமுதன்மை செய்தி

மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கத் தூண்டும் எரிபொருளின் விலை

ஜூன் 21, 2026
அண்மைய செய்திகள்உலகம்

உலக சந்தையில் மண்ணெண்ணெய்யின் தற்போதைய விலை நிலவரம்…

ஏப்ரல் 25, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மே 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?