Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தமிழக இடைத்தேர்தல்: 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!

செப்டம்பர் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், பரிசீலனைக்குப் பிறகு மொத்தம் 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத் தகவலின்படி, மதுராந்தகத்தில் 28 வேட்பாளர்களின் மனுக்களும், தாராபுரத்தில் 30 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விரு தொகுதிகளிலும் பெறப்பட்ட மொத்தம் 91 மனுக்களில் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆளும் த.வெ.க. கட்சி, தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் முறையாக இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தனித்தொகுதிகளான இவ்விரு தொகுதிகளிலும் ஐந்து முனை போட்டி நிலவவுள்ளது.

ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் களம் இதுவாகும். த.வெ.க. சார்பில் மதுராந்தகத்தில் கே. மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் பி. சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தவர்களாவர்.

தி.மு.க. சார்பில் மதுராந்தகத்திற்கு ஐ. பரந்தாமனும், தாராபுரத்திற்கு எஸ். சுகன்யாவும் போட்டியிடுகின்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத்தும், தாராபுரத்தில் கே. பானுமதியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு, முழுக்க முழுக்க பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

பாரம்பரியக் கூட்டணியில் இருந்து விலகி சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ.(எம்) ஆகிய இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதுடன், த.வெ.க. மற்றும் தி.மு.க.வுக்கு நேரடி எதிரணியாகக் களம் காண்கின்றன.

முந்தைய செய்தி காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்
அடுத்த செய்தி சமூகநீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் இடையே மோதல்

ஆகஸ்ட் 29, 2026
இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் – நால்வரிடம் தீவிர விசாரணை!

ஜூலை 14, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் மீனவ பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

மார்ச் 7, 2025
இந்தியா

பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

செப்டம்பர் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?