Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்

செப்டம்பர் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) எபோலா வைரஸ் பரவல் நிலைமை இன்னும் தீவிரமான சூழலிலேயே நீடித்து வருவதாக ஆப்பிரிக்க சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் குறைபாடுகள் நிலவுவதைச் சுட்டிக்காட்டும் தரவுகள் கிடைத்துள்ளதால், நிலைமை இன்னும் சீரடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டிய எபோலா வைரஸ் பரவல், தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் காங்கோ சுகாதார அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா (Samuel Roger Kamba) தெரிவித்திருந்தார்.

எனினும், ஆப்பிரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (Africa CDC) பணிப்பாளர் நாயகம் ஜீன் கசேயா (Jean Kaseya), எபோலா பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வைரஸ் பரவல் சீராகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும், பரவலின் உச்சக்கட்டம் கடந்துவிட்டது என்பதை தற்போதைய தரவுகள் மூலம் உறுதிப்படுத்த முடியாது என்றும் Africa CDC அமைப்பின் அவசர ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

காங்கோ அதிகாரிகளின் அறிக்கைகள் முழுமையற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜீன் கசேயா, தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்தால் மட்டுமே பரவலின் உச்சக்கட்டம் கடந்துவிட்டதாகக் கருத முடியும் எனக் கூறினார்.

அதேவேளை, நாட்டின் கிழக்கு இட்டூரி (Ituri) மாகாணத்தில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையில் லேசான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள ஆப்பிரிக்க சுகாதார அமைப்பு, காங்கோ அரசுக்குத் தேவையான ஆதரவுகளைத் தொடர்ந்து வழங்க உறுதியளித்துள்ளது.

முந்தைய செய்தி இளவரசர் ஹரி முதன்முறையாக பொதுநிகழ்வில் பங்கேற்பு
அடுத்த செய்தி தமிழக இடைத்தேர்தல்: 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஆகஸ்ட் 5, 2025
உலகம்

இந்தோனேசியாவில் நாய், பூனை இறைச்சிக்கு தடை விதிப்பு!

நவம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு…

மே 18, 2025
உலகம்

ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

அக்டோபர் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?