Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

நில அபகரிப்பு புகார்: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர்!

செப்டம்பர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளித் தோழர் அவரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். உயர்நிலைப் பள்ளியில் பிரதமர் மோடியுடன் பயின்ற 81 வயதான அஸ்கரலி வோஹ்ரா என்பவரே இவ்வாறு பிரதமரைச் சந்தித்து உதவி கோரியுள்ளார்.

மும்பை பயந்தர் கிழக்கு நவகார் பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,810 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை அஸ்கரலி வோஹ்ரா கடந்த 1989ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து வாங்கியுள்ளார்.

எனினும், கடந்த 2011ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் தனது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனக்குத் தெரியாமல் நிலத்தைப் பிரித்து, ‘ஸ்வயம் பில்டர்ஸ்’ மற்றும் ‘செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ ஆகிய இரு கட்டுமான நிறுவனங்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நில ஆக்கிரமிப்பில் ‘செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் தொடர்புள்ள பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவுக்குத் தொடர்பு இருப்பதாக வோஹ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடமும் காவல் நிலையங்களிலும் முறையிட்டும் தீர்வு கிடைக்காத நிலையிலேயே, கடந்த செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த வோஹ்ரா, இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

பிரதமருடனான இச்சந்திப்பைத் தொடர்ந்து உள்ளூர் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ‘ஸ்வயம் பில்டர்ஸ்’ மற்றும் ‘செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முந்தைய செய்தி டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘டோரதி’!
அடுத்த செய்தி விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: சென்னை திரும்ப 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

நீட் இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் – ஐஐடியில் பொறியாளராக நியமனம்

செப்டம்பர் 2, 2026
இந்தியா

அநாதரவாக நின்ற பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர்

டிசம்பர் 13, 2025
இந்தியா

சீமான் மீது வழக்கு தொடர மேல் நீதிமன்றம் உத்தரவு!

ஆகஸ்ட் 20, 2025
இந்தியா

“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” – விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்

செப்டம்பர் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?