Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் கள் உற்பத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

செப்டம்பர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கள் ஏற்றுமதியில் தற்போது நிலவும் இடையூறுகளை அகற்றி, எதிர்காலத்தில் வெளிப்படையானதும் நிரந்தரமானதுமான பொறிமுறையொன்றை உருவாக்குவதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறிப்பாக, காரைநகர் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்றுமதிக்கான கள் உற்பத்தி தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறித்த சங்கம் தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்நிறுவனத்தால் வழங்கப்படும் தொழில்நுட்ப அறிவின் அடிப்படையில் கள் உற்பத்தியை முன்னெடுத்து வரும் நிலையில், ஒப்பந்தத்தில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதையடுத்து, தனியார் நிறுவனம், கூட்டுறவுச் சங்கம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் ஆகிய தரப்புகளுக்கிடையில் நிலவும் விடயங்களுக்கு உரிய இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.

அதேவேளை, இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எவ்விதத் தெளிவின்மைக்கும் இடமளிக்காத வகையில் வெளிப்படையானதும் நிலையானதுமான பொறிமுறையொன்றின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து ஏற்றுமதிக்காக கள்ளைக் கொள்வனவு செய்வதும், அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்ப அறிவை வழங்குவதும் எதிர்காலத்தில் கேள்விகோரல் நடைமுறையின் ஊடாக முன்னெடுக்கப்படுவதற்கான தனியான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், கூட்டுறவு உதவி ஆணையாளர் (தலைமைப்பீடம்), கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கப் பிரதிநிதிகள், காரைநகர் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் ரப்பேர்ஸ் டியூ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவுநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி மன்னாரிற்கு விஜயம் செய்த அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன
அடுத்த செய்தி வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

டெனேர் பீச் (Denare Beach) பகுதியின் தெற்குப் பிராந்தியத்தை முழுமையாக அழித்தது காட்டுத்தீ!

ஜூன் 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

மே 9, 2025

மே 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபர் கைது

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய மீனவர்

ஆகஸ்ட் 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?