கனடாவைச் சேர்ந்த பிரபல தனியார் ஜெட் விமான தயாரிப்பு நிறுவனமான பாம்பார்டியர் (Bombardier), அமெரிக்காவில் தனது உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தியைத் தொடங்காவிட்டால், அந்நாட்டில் விமானங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தக மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் டிரம்ப் இந்த தகவலைப் பதிவிட்டுள்ளார்.
பாம்பார்டியர் நிறுவனம் தனது வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை அமெரிக்கச் சந்தையிலிருந்தே பெறுகிறது சுட்டிக்காட்டிய டிரம்ப், கனடிய அரசு அமெரிக்க வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் அந்நாட்டில் தொழில் செய்வதைத் தடுப்பதாகவும், அமெரிக்காவின் ‘கல்ஃப்ஸ்ட்ரீம்‘ (Gulfstream) விமான நிறுவனத்திற்கு நியாயமற்ற முறையில் தடைகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவை ஒரு சேமிப்புச் உண்டியலாகப் (Piggybank) பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று, டொனால்ட் ட்ரம்ப் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
கனேடிய உற்பத்திகள் மீதான அமெரிக்க அரசின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்குப் புதிய வரிகளை விதிக்கத் தீர்மானித்துள்ள பின்னணியிலேயே டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

