Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘மூன்வாக்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செப்டம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ்த் திரையுலகில் ‘காதலன்’, ‘மின்சார கனவு’, ‘லவ் பேர்ட்ஸ்’ மற்றும் ‘மிஸ்டர் ரோமியோ’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, சுமார் 25 ஆண்டுகள் கழித்து நடனப்புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருபெரும் ஆளுமைகள் மீண்டும் இணையும் திரைப்படத்திற்கு ‘மூன்வாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

திரையுலகினரிடையேயும் ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், வரும் 2026 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முழுக்க முழுக்க நகைச்சுவை, நடனம் மற்றும் குடும்பக் கொண்டாட்டப் படமாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் மூலம் பிரபல ஊடக நிறுவனமான பிகைண்ட்வுட்ஸ் (Behindwoods) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மனோஜ் என்.எஸ் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் மிக முக்கியச் சிறப்பம்சமாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதோடு மட்டுமின்றி ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு 16 வித்தியாசமான வேடங்களில் நடித்து ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இவர்களுடன் அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் களம் இறங்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம், 2026 தீபாவளிப் ரேஸில் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் திரைப்படமாக இணைந்துள்ளது.

முந்தைய செய்தி ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’ மூலம் ஹாலிவுட்டில் காலடி வைக்கும் வித்யூத் ஜம்வால்!
அடுத்த செய்தி இயக்குநராக மாற 5 ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன்: நடிகை பார்வதி திருவோத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ஆகஸ்ட் 4, 2025
சினிமா

The Epic திரைப்படம் டால்பி தொழில்நுட்பத்தில் வெளியாகும் பாகுபலி!

செப்டம்பர் 27, 2025
சினிமா

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முதல் ஃபர்ஸ்ட் சிங்கிள் திகதி அறிவிப்பு!

ஜூலை 21, 2025
சினிமா

அரசன் திரை படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

நவம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?