உலக அளவில் ஒஸ்கார் விருதுகள் திரைக்கலைஞர்களுக்கு ஒரு மாபெரும் கனவாக இருந்து வருகிறது. இதனைப் பெற வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான திரைக்கலைஞர்களுக்கு உண்டு.
ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி அடுத்த ஆண்டு மார்ச் 25ஆம் திகதி நடைபெற உள்ளது. இதனை பிரபல தொகுப்பாளர் கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒஸ்கார் படங்களைத் தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் குழுவில் இடம்பெறுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு ஒஸ்கார் நிர்வாகக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.