Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்காவின் 50% வரிக்கு கனடா பதிலடி – 28 பில்லியன் டொலர் பொருட்களுக்கு புதிய வரி!

ஆகஸ்ட் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க அரசாங்கம் கனடியப் பொருட்கள் மீது புதிதாக விதித்துள்ள 50 சதவீத கூடுதல் இறக்குமதி வரிகளுக்கு எதிராக, சுமார் 28 பில்லியன் டொலர்
மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு மத்திய அரசு உடனடியாகப் பதில் வரிகளை விதித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, இந்த வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி வரி அதிகரிப்பு, கனடாவைப் பிரித்து பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டது எனக் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கடுமையாக விமரிசித்துள்ளார்.

கனடா எந்நாளும் அமெரிக்காவின் ஒரு 'துணை நிறுவனமாக மாறவோ அல்லது கட்டுப்படவோ ஒப்புக்கொள்ளாது எனவும் அமெரிக்கத் தரப்பு சரியான அணுகுமுறையுடன் வரும் வரை பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பப்போவதில்லை எனவும் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.

மத்திய தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) இது குறித்துத் தெரிவிக்கையில், அமெரிக்காவின் நியாயமற்ற வரி விதிப்புகளுக்கு எதிராகக் கனடா தனது பொருளாதாரத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்கப் பதிலுக்குப் பதில்' (Dollar-for-Dollar) நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த வரி அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார நெருக்குதல்கள் காரணமாக, அமெரிக்காவுடனான வர்த்தகச் சார்பைக் குறைத்து, சர்வதேச அளவில் புதிய சந்தைகளைக் கண்டறியும் முயற்சியில் மத்திய அரசு தற்போது கவனம் செலுத்தி வருகின்றது.

முந்தைய செய்தி ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்
அடுத்த செய்தி எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடிக்கும் ‘விடியும் காத்திரு’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

டெல்லி- சன்ரைசஸ் அணிகள் இன்று மோதல்

மே 5, 2025
கனடாமுதன்மை செய்தி

லயன் நிறுவன மின்சாரப் பள்ளிப் பேருந்துகள் மீது பாதுகாப்புச் சோதனைகள் முன்னெடுப்பு

செப்டம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி உயிரிழப்பு

செப்டம்பர் 21, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு…

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?